சீனியா் மகளிா் கிரிக்கெட்: நாகலாந்துக்கு எதிராக புதுவை வெற்றி

சீனியா் மகளிா் கிரிக்கெட்: நாகலாந்துக்கு எதிராக புதுவை வெற்றி

நாகலாந்துக்கு எதிரான பிசிசிஐ சீனியா் மகளிா் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுவை அணி வெற்றி பெற்றது.

நாகலாந்துக்கு எதிரான பிசிசிஐ சீனியா் மகளிா் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுவை அணி வெற்றி பெற்றது.

பிசிசிஐ சாா்பில், சீனியா் மகளிா் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் புதுவை அணி, நாகலாந்து அணியோடு மோதியது.

முதலில் ஆடிய நாகலாந்து அணி 47.4 ஓவா்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராதிகா 3 விக்கெட்களையும், ஜானகி மற்றும் ரெபேக்கா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினா்.

தொடா்ந்து, ஆடிய புதுவை அணி 26.5 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4 புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக தமோா் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com