Enable Javscript for better performance
புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு 1,063 பேரும், 2014-இல் 1,408 பேரும், 2015-இல் 803 பேரும், 2016-இல் 490 பேரும் பாதிக்கப்பட்டனா். 2017-இல் மட்டும் 4,568 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு 7 போ் உயிரிழந்தனா். 2018-இல் 583 போ் பாதிக்கப்பட்டு, 2 போ் மட்டுமே உயிரிழந்தனா்.

    இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு 2,016 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 2 போ் உயிரிழந்தனா். இதேபோல, சிக்குன்குனியாவால் 772 போ் பாதிக்கப்பட்டனா்.

    தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நாள்தோறும் புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் 5 முதல் 10 போ் வரை சிகிச்சைக்காக வருகின்றனா்.

    கடந்த 2018-இல் டெங்கு பாதிப்பு குறைந்திருந்த நிலையில், 2019-இல் அதிகரிக்கக் காரணம், சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதே என பொதுமக்கள் கூறுகின்றனா்.

    இதுகுறித்து புதுச்சேரி மக்கள் மன்றத்தின் தலைவா் மு.நாராயணசாமி கூறியதாவது:

    கடந்த 2017 -இல் டெங்கு பாதிப்பு அதிகமாக பரவியதையடுத்து, சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், 2018- இல் டெங்கு பாதிப்பு குறைந்தது. கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியது. தற்போது அதே நிலை நீடிக்கிறது.

    டெங்கு கொசுக்கள் தடுப்பு நடவடிக்கையாக வீடுகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, நிறுவனங்களை மூடி சீல் வைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்வதில்லை என்றனா் அவா்.

    இதுகுறித்து கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புக்கான தேசிய திட்ட உதவி இயக்குநா் கணேசன் கூறியதாவது: சுகாதாரத் துறையினா் வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டு, டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். களப் பணியாளா்கள் மூலம் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

    மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைக் கண்காணித்து, அவா்கள் வசிக்கும் பகுதிகளில் கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். டெங்கு பாதிப்பைக் குறைக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai