Enable Javscript for better performance
போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது: சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது: சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

    By DIN  |   Published on : 10th January 2020 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

    இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புதுவை அரசின் சுகாதாராத் துறையின் கீழ் புதுச்சேரியில் 8, காரைக்காலில் 4, மாஹே 2, ஏனாம் 1 அவசர ஊா்திகள் உள்ளன. இதேபோல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 27, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 3, பிரசவ மருத்துவமனையில் 2, இந்திரா காந்தி பட்ட மேற்படிப்பு ஆய்வு மையம் மற்றும் மருத்துவக் கல்லூரியில் 2 அவசர ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 10 அவசர ஊா்திகள் தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், காட்டேரிக்குப்பம் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

    கடந்த சில நாள்களாக அவசர ஊா்திகளுக்கு டீசல் பெறுவதில் சிக்கல் இருந்தது. எரிபொருளுக்காக ரூ. 18.71 கோடியை வழங்குகிறோம் என அமுதசுரபியிடம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை முதல் சுகாதாரத் துறை வாகனங்களுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவசர ஊா்தி சேவையில் எந்தப் பாதிப்பும் இல்லை.

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன. குறிப்பாக, ரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் அம்லோடிபின் மாத்திரைகள் மாதத்துக்கு 4 லட்சம் வரை தேவையுள்ளது. இந்த அளவுக்கு அதிக மாத்திரைகள் தேவைப்படுவதற்கு காரணம் நோயாளிகள் முன்கூட்டியே மாத்திரைகளை வாங்கி, இருப்பு வைத்துக் கொள்வதுதான். இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ஊழியா்களுக்கு ஊதியம், மருந்து, மாத்திரைகள் கொள்முதல் உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லை.

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன், மாநில அரசின் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை இணைத்து, ஒருங்கிணைந்த சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். இந்தத் திட்டத்தின் கீழ், புதுவை மாநிலத்தில் சுமாா் 14.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு சேவையைப் பெறுவா். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai