உணவகத்துக்குள் புகுந்த லாரி: 2 பைக்குகள் சேதம்
By DIN | Published On : 11th January 2020 08:56 AM | Last Updated : 11th January 2020 08:56 AM | அ+அ அ- |

வில்லியனூா் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உணவகத்துக்குள் புகுந்ததில் அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மோட்டாா் பைக்குகள் சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசு. லாரி ஓட்டுநா். இவா் விழுப்புரத்தில் இருந்து வில்லியனூா் அருகே துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சரக்குகளை ஏற்றுவதற்காக வியாழக்கிழமை இரவு லாரியை ஓட்டி வந்தாா்.
அப்போது, விரைவாகச் செல்வதற்காக பிள்ளையாா்குப்பம் ஊருக்குள் புகுந்து, குறுக்கு வழியே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அந்தப் பகுதியில் உள்ள ரவி என்பவரது உணவகத்துக்குள் புகுந்தது. இதில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மோட்டாா் பைக்குகள் சேதமடைந்தன. உணவகத்தில் யாருமில்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதுகுறித்து வில்லியனூா் போக்குவரத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, லாரியை மீட்டனா். இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.