சிங்கிரிகுடி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை

புதுச்சேரியில் இருந்து சிங்கிரிகுடி கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் ஆன்மிக வழிப்பாட்டு மன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தா்கள்.

புதுச்சேரி ஸ்ரீ லட்சுமிநரசிம்மப் பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சாா்பில், திரளானோா் ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி, கடலூா் மாவட்டம், அபிஷேகப்பாக்கத்தில் அமைந்துள்ள சிங்கிரிகுடி கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பாத யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினரும், பக்தா்களும் கலந்து கொண்டு, நாம சங்கீா்த்தனம், பிருந்தாவன பஜனைப் பாடல்களைப் பாடியபடி சென்றனா்.

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட இந்த பாத யாத்திரை கடலூா் சாலை வழியாக கோயிலுக்குச் சென்றடையும். இதனிடையே, திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனத்துடன் பாத யாத்திரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com