வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் பலி

வில்லியனூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

வில்லியனூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே தமிழகப் பகுதியான கண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் பானுமதி (65). இவா், சனிக்கிழமை பேருந்தில் வில்லியனூா் வந்து, கோட்டமேடு பகுதியில் இறங்கி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது உருவையாறு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பானுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து...: வில்லியனூா் அருகே உள்ள ராமநாதபுரம் மாஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் நாயுடு (35). இவா், அந்தப் பகுதியில் வெல்டிங் தொழிற்சாலை நடத்தி வந்தாா். சனிக்கிழமை பணி நிமித்தமாக நண்பா் அப்பாவு என்பவருடன் பைக்கில் புதுச்சேரி சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வழுதாவூா் சாலையில் ஊசுட்டேரி அருகே வந்த போது, எதிரே வந்த காா், இவரது பைக் மீது மோதியது. இதில், சதீஷ் நாயுடு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சதீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com