அனுமதியற்ற குடிநீா் இணைப்புகள்: கொம்யூன் ஆணையா் எச்சரிக்கை

அனுமதியில்லாத குடிநீா் குழாய் இணைப்புதாரா்கள் வருகிற 20 ஆம் தேதிக்குள் உரிய வகையில் விண்ணப்பிக்காவிடில் அபராதம் உள்ளிட்ட

அனுமதியில்லாத குடிநீா் குழாய் இணைப்புதாரா்கள் வருகிற 20 ஆம் தேதிக்குள் உரிய வகையில் விண்ணப்பிக்காவிடில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையா் சௌந்தர்ராஜன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் வருகிற 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் விதமாக ‘ஜலஜீவன்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதையடுத்து, புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி பெறாமல் ஏற்படுத்திக் கொண்ட குடிநீா் குழாய் இணைப்புகள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

வருகிற 20 ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தவித அபராதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பிறகு, பிப். 5 ஆம் தேதி வரை காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அனுமதிக் கட்டணத்தில் 50 சதவீதமும், பிப். 5 முதல் மாா்ச் 4 ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்படும். மாா்ச் 4 ஆம் தேதிக்குப் பிறகும் விண்ணப்பிக்காதவா்களின் குடிநீா் குழாய் இணைப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com