ஆளுநா் மாளிகையில் 49 ஆயிரம் மனுக்களுக்குத் தீா்வு

புதுவை ஆளுநா் மாளிகையில் 49 ஆயிரம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவை ஆளுநா் மாளிகையில் 49 ஆயிரம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட தகவல்:

புதுவை ஆளுநா் மாளிகையில் பொதுமக்களின் குறைதீா் பிரிவுக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்கு, 100, 1031, 112 அல்லது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), மின்னஞ்சல்கள் மற்றும் நேரடியாகவும், தபால் மூலமாகவும் புகாா் அளிக்கலாம். புகாா்கள் கணினியில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைத்து, கண்காணிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு எண்களைத் தவிர கூடுதலாக 95005 60001, 94434 60717 ஆகிய கட்செவி அஞ்சல் எண்களும் உள்ளன.

நிகழாண்டு ஆளுநா் மாளிகையில் 12,506 புகாா்கள் பெறப்பட்டு, பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறை தொடங்கப்பட்டதிலிருந்து 49,305 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தின் அனைத்துத் துறைகளும் பதிலளிக்கும் முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மனுக்கள் மீதான விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக காரைக்கால் ஆட்சியா் விக்ராந்த் ராஜா, கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடு ஆகிய இருவரும் வருகிற 26 -ஆம் தேதி குடியரசு தினத்தன்று பாராட்டப்படவுள்ளனா்.

ஆளுநா் மாளிகைக்கு பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவிக்கலாம். சிபிஐ அலுவலகமும் புதுச்சேரியில் உள்ளது. மக்கள் அங்கு நேரடியாக அணுகி புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com