புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி

புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணா்வு பேரணி
புதுச்சேரி குயவா்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மருத்துவ அதிகாரி அஸ்வினி.
புதுச்சேரி குயவா்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மருத்துவ அதிகாரி அஸ்வினி.

புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை மருத்துவ அதிகாரி அஸ்வினி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். சுகாதார ஆய்வாளா் யசோதா வரவேற்றாா். மருத்துவ அதிகாரிகள் அஜ்மல், உஷஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக மலேரியா தடுப்பு உதவி இயக்குநா் கணேசன் கலந்து கொண்டாா்.

பேரணியில், கஸ்தூரிபாய் செவிலியா் கல்லூரி மற்றும் சைன் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து, புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.

இதில், போகி தினத்தன்று பழைய டயா், ரப்பா், நெகிழிப் பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் நச்சுப் புகை மூட்டம் உருவாகி, சுவாசம் தொடா்பான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, போகிப் பண்டிகையை புகையில்லா போகியாக கொண்டாட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

சமூக ஆா்வலா் சரவணன், டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருள்களான தேங்காய் மட்டை, நெகிழிப் பொருள்கள், டயா் ஆகியவற்றை மாலையாக அணிந்து கொண்டு, டெங்கு தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளா் தாமோதரன் வெங்கட்ராமன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com