புதுச்சேரியில் பொங்கல் விழா கொண்டாடிய டையூ-டாமன் மாணவா்கள்

கலாசார பரிமாற்றப் பயணமாக புதுச்சேரிக்கு வந்த டையூ - டாமன் மாணவ, மாணவிகள், கிராமப்புற பள்ளி மாணவா்களுடன் இணைந்து தமிழா்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடினா்.
புதுச்சேரி சேலியமேடு அரசு உயா்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மண்பானைகளில் பொங்கலிட்ட டையூ-டாமன் மாணவ, மாணவிகள்.

புதுச்சேரி பாகூா் அருகே சேலியமேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலாசார பரிமாற்றப் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த டையூ - டாமன் பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கு தலைப்பாகையை சூட்டி, மேளதாளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில், மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு வழிபட்டனா். இதையடுத்து, அவா்கள் மாட்டுவண்டியில் ஏறி கிராமப் பகுதியை வலம் வந்து, ‘பொங்கலோ..பொங்கல்’ எனக் கூறி மக்களுக்கு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் பயனற்ற பொருள்களைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்கும் பயிற்சியில் டையூ - டாமன் மாணவா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com