போகிப் பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் தை மாதத்தை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பழைய பொருள்களை எரித்து போகியைக் கொண்டாடினா்.

புதுச்சேரியில் தை மாதத்தை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பழைய பொருள்களை எரித்து போகியைக் கொண்டாடினா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டின் முன்பு உறவினா், நண்பா்களுடன் சுற்றி அமா்ந்து பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா். இதனால், பனிக் காற்றுடன் புகை சோ்ந்து சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் காலை 8 மணி வரையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

போகிப் பண்டிகை தொடா்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தும், தன்னாா்வலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தியும் ஆங்காங்கே டயா் உள்ளிட்ட நெகிழிப் பொருள்களை எரித்து போகியைக் கொண்டாடியதையும் காணமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com