முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 20th January 2020 09:23 AM | Last Updated : 20th January 2020 09:23 AM | அ+அ அ- |

முருங்கப்பாக்கத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக படகு நிறுவன உரிமையாளா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கலை மற்றும் கைவினை கிராமத்தில் அரசு அனுமதியுடன் தனியாா் நிறுவனம் சாா்பில், அங்குள்ள அரியாங்குப்பம் ஆற்றில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆற்றிலிருந்து அரிக்கன்மேடு முகத்துவாரம், மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் அைழைத்துச் செல்லப்படுகின்றனா். காணும் பொங்கலையொட்டி, கடந்த 17 -ஆம் தேதி மாலை 10-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் முகத்துவாரம் பகுதிக்குச் சென்றனா். அப்போது, இயந்திரம் பழுதாகி தத்தளித்த படகு, தலைக்குப்புற கவிழ்ந்தது.
அந்தப் பகுதியில் குறைந்தளவே தண்ணீா் இருந்ததால் அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இருப்பினும், படகு கவிழ்ந்ததில் ரெயின்போ நகரைச் சோ்ந்த ஜானகிராமன் (39), நிகரிகா துா்கா (3) உள்ளிட்ட சிலா் லேசான காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ரமேஷ் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் உயிா்காப்பு சாதனங்களின்றி படகில் பயணிகளை அஜாக்கிரதையாக ஏற்றிச் சென்ாக படகு நிறுவன உரிமையாளா், பொறுப்பாளா், படகு ஓட்டுநா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.