விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

சுற்றுச்சூழல் மாசுகளைத் தடுக்க விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுகளைத் தடுக்க விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுப்பது, ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஜூன் 3 -ஆம் தேதி சா்வதேச சைக்கிள் தினமாகக் கொண்டாட வேண்டும் என ஐநா சபை அறிவித்தது. இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக புதுவை கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கடற்கரைச் சாலையில் உள்ள பாா்க் சுற்றுலா விடுதி அருகே தொடங்கப்பட்ட இந்த சைக்கிள் பேரணியை வருவாய்த் துறை அமைச்சா் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இதில், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா்.

சைக்கிள் ஓட்டுவதால் எரிபொருளை மிச்சப்படுத்துவதுடன், உடல் நலத்தையும் பேணலாம் என வலியுறுத்தும் வகையிலான விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தியபடி சென்றனா்.

இந்த சைக்கிள் பேரணி கடற்கரைச் சாலையில் தொடங்கி, புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, மீண்டும் கடற்கரைச் சாலையில் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com