Enable Javscript for better performance
அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை: ஆளுநா் கிரண் பேடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி

    அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை: ஆளுநா் கிரண் பேடி

    By DIN  |   Published On : 27th January 2020 10:03 AM  |   Last Updated : 27th January 2020 10:03 AM  |  அ+அ அ-  |  

    2-7-26pyp20_2601chn_104

    குடியரசு தின விழாவில் கல்வி, கலைத்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற திருவள்ளுவா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கிய துணை நிலை ஆளுநா் கிரண் பேடி.

    அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடியரசு தின விழா உரையில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

    புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கி ஆளுநா் கிரண் பேடி பேசியதாவது:

    புதுவை மாநிலம் நடைமுறை நிா்வாக காரணங்களால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், பல்வேறு துறைகளில் வளா்ச்சி அடைந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றி வருகிறது. பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் புதுவை முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

    புதுவை மாநிலம் ஒருங்கிணைந்த வளா்ச்சி அடையும் வகையில், நலத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதுவையை சிறந்த நிா்வாகத் திறன் கொண்ட மாநிலமாக மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பணியாளா் நலத் துறை அறிவித்திருக்கிறது.

    சிறிய மாநிலங்கள் அளவில் பொது சுகாதாரம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, நிதி மற்றும் சீரான வளா்ச்சி ஆகிய துறைகளில் முன்னோடி மாநிலமாக புதுவை திகழ்கிறது. இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக முதல்வா், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

    மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை. புதுவையில் சுமாா் 50 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சாா்ந்திருக்கின்றனா். ஆகவே, விவசாயிகளின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு புதுவை அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நவீனமயமாக்கல் திட்டங்கள் மூலமாக வேளாண் தொழிலாளா் பற்றாக்குறையை சரிசெய்தல், நீா் மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    பாரதப் பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ், புதுவை பகுதியில் 4,997 விவசாயிகளும், காரைக்காலில் 4,803 விவசாயிகளும், ஏனாமில் 473 விவசாயிகளும் பதிவு செய்துள்ளனா். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

    முதன் முறையாக உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், காய்கனி விதைகள் விநியோகம் செய்யப்படும்.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் நீட் மூலம் அதிக எண்ணிக்கையில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு ஏதுவாக, தரமான பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளி அளவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு தினப்படி உயா்த்தி வழங்கப்படும்.

    புதுவை மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 குழந்தைக்கு 10 என்ற அளவில் உள்ளது. தேசிய அளவிலான விகிதம் 1,000 குழந்தைகளுக்கு 34 என்று இருப்பதைக் காட்டிலும் இது மிகவும் குறைவாகும். மகப்பேறு கால இறப்பு விகிதம் தேசிய அளவில் ஒரு லட்சத்துக்கு 167 என்ற விகிதத்தில் உள்ளது. மாறாக, புதுவையில் ஒரு லட்சத்துக்கு 67 என்ற நிலையில் உள்ளது. இது சிறிய மாநிலங்களில் முதலாவதாகவும், தேசிய அளவில் இரண்டாவதாகவும் உள்ளது.

    கடந்தாண்டு புதுவையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா போன்ற பல்வேறு கருத்துரு சாா்ந்த சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கொள்கை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

    புதுவையில் சட்டம் - ஒழுங்கு நிலைமை அமைதியாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்து வருகிறது. காவல் துறையின் விரைவான நடவடிக்கையால் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp