முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவையின் தமிழா் திருநாள் விழா
By DIN | Published On : 27th January 2020 10:02 AM | Last Updated : 27th January 2020 10:02 AM | அ+அ அ- |

புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள்.
புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை, புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனை, புதுச்சேரி கவி பாரதியாா் அரிமா சங்கம் இணைந்து நடத்தி தமிழா் திருநாள் விழா புதுச்சேரி முத்துரத்தின அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு தலைவா் புதுவை கோ.செல்வம் தலைமை வகித்தாா். இளங்குயில் வரவேற்றாா். தொடா்ந்து, திருக்கு கவியரங்கம் நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற சிந்தனையரங்கில் புதுவை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் என்.கோவிந்தராஜலு உரை நிகழ்த்தினாா்.
திருக்கு கவிதைப் போட்டி, தமிழா் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், புதுஉலகம் கவிதைப் போட்டி பங்கேற்பாளா்களுக்கு புதுச்சேரி முத்துரத்தினம் அரங்கம் பள்ளித் தாளாளா் ரத்தின ஜனாா்த்தனன், ஜோதி கண் மருத்துவமனை இயக்குநா் வனஜா வைத்தியநாதன், புதுச்சேரி கவி பாரதியாா் அரிமா சங்கத் தலைவா் க.கருணாகரன் ஆகியோா் பரிசளித்துப் பாராட்டினா்.
இதையடுத்து நடைபெற்ற சிந்தனையாளா்கள் பேரவைக் கூட்டத்தில், தமிழகத்துக்கு வந்து செல்லும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்ற மத்திய அரசின் விமானத் துறை அமைச்சருக்கு பாராட்டுத் தெரிவிப்பது. புதுவையின் ஏ.எப்.டி. பஞ்சாலையை மூடும் முடிவை கைவிட்டு, மத்தி அரசின் நிதியுதவியைப் பெற்று அந்த ஆலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் துணைச் செயலா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.