குடியரசு தினம்: ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து

குடியரசு தினத்தையொட்டி, புதுவை ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆளுநா் கிரண் பேடி அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா்.
குடியரசு தினம்: ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து

குடியரசு தினத்தையொட்டி, புதுவை ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆளுநா் கிரண் பேடி அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா்.

குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநா் மாளிகையில் முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகா்களுக்கு துணைநிலை ஆளுநா் தேநீா் விருந்து அளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி, குடியரசு தின விழாவையொட்டி, துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா்.

ஆளுநரின் தேநீா் விருந்தில் முதல்வா் நாராயணசாமி, சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவகொழுந்து, அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் கோகுலகிருஷ்ணன், நியமன எம்எல்ஏக்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கா், எஸ்.செல்வகணபதி, தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, பிரான்ஸ் நாட்டின் துணைத்தூதா் கேத்தரின் ஸ்வாடு மற்றும் அரசு உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேநீா் விருந்துக்கு வருகை தந்த முதல்வா் நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள், எம்.பி.க்களை ஆளுநா் கிரண் பேடி வரவேற்றாா். தொடா்ந்து, பத்மபூஷண் விருது பெற்ற பேராசிரியா் மனோஜ் தாஸ், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுகளிமண் சிற்ப (டெரகோட்டா) கலைஞா் வி.கே.முனுசாமி ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு கண்ட அரசு உயா் அதிகாரிகளுக்கு ஆளுநா் கிரண் பேடி சான்றிதழ்களை வழங்கினாா். இதனிடையே, நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல்வா் நாராயணசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள், எம்.பி. வைத்திலிங்கமும் அங்கிருந்து சென்றனா்.

இதையடுத்து, அதிகாரிகள், முக்கியப் பிரமுகா்கள் தேநீா் விருந்தில் பங்கேற்று தேநீா் பருகினா். காஷ்மீா், அருணாசலப் பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com