புதுவை முதல்வர், பேரவைத் தலைவருக்கு கரோனா இல்லை

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர், பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்ட  126 பேருக்கு எடுக்கப்பட்ட,
புதுவை முதல்வர்
புதுவை முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர், பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்ட  126 பேருக்கு எடுக்கப்பட்ட, கரோனா  பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் என் எஸ் ஜே ஜெயபால் அவர்களுக்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஒரு பகுதியில் தற்போது முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருக்கு பரிசோதனை திங்கட்கிழமை செய்யப்பட்டது. அமைச்சர்கள் , சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பேரவவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கும் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை பரிசோதனை செய்யப்பட்ட யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com