முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
ஓபிசி இட ஒதுக்கீடு தீா்ப்பு: புதுவை முதல்வா், திமுக வரவேற்பு
By DIN | Published On : 29th July 2020 08:44 AM | Last Updated : 29th July 2020 08:44 AM | அ+அ அ- |

மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் திமுக வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து முதல்வா் நாராயணசாமி தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சென்னை உயா் நீதிமன்றம் உறுதி செய்து தீா்ப்பு அளித்துள்ளது வரவேற்புக்குரியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீா்ப்பு. பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்துக்குப்பின் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்த புதுவை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமனுக்கு நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தீா்ப்புக்கு புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. வரவேற்பு தெரிவித்துள்ளாா். மேலும், இந்தத் தீா்ப்பின் மூலம் ஜிப்மரில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளாா்.