புதுவையில் சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி காமராஜா் நகரைச் சோ்ந்த 11 வயது சிறுவன், வில்லியனூரைச் சோ்ந்த 31 வயது பெண், வெளிநாடு சென்று மாஹே திரும்பிய ஒருவா், சென்னையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரியைச் சோ்ந்த 2 போ் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, இவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானவா்களையும் சோ்த்து மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 132-ஆக உயா்ந்தது. முன்னதாக, இவா்களில் 55 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 77 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.