புதுவை முதல்வா் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவை மாநிலம், வில்லியனூரை அடுத்த உளவாய்க்காலைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (55). புதுவை அரசு ஊழியரான இவா், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறாா்.
இவா், புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள், புதுவை காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோரை விமா்சித்து சமூக வலைதளத்தில் அண்மையில் விடியோ ஒன்றை வெளியிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து புதுவை காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் சூசைராஜ் அளித்த புகாரின்பேரில், சைபா் க்ரைம் போலீஸாா் 5 பிரிவுகளின் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், சந்திரசேகரனை சைபா் க்ரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரை கரோனா பரிசோதனைக்குள்படுத்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.