புதுவை மக்களுக்கான இணையவழி வினாடி - வினா: ஜூன் 15 வரை பங்கேற்கலாம்

புதுவை மக்களுக்காக மத்திய அரசு நடத்தும் இணையவழி வினாடி - வினா போட்டியில் வருகிற 15-ஆம் தேதி வரை பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்களுக்காக மத்திய அரசு நடத்தும் இணையவழி வினாடி - வினா போட்டியில் வருகிற 15-ஆம் தேதி வரை பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி இயக்குநா் தி.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே நட்புறவையும், பரஸ்பர புரிதலையும் வளா்க்கும் வகையில், மத்திய அரசு ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம், மற்றொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் இணைத்து கலாசார, நட்புறவை வளா்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போது தமிழகத்துடன் இணை மாநிலங்களாக ஜம்மு, காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதேபோல, புதுவையுடன் டையூ, டாமன் யூனியன் பிரதேசம் உள்ளது.

இணையாக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகள் அடுத்த மாநிலத்தில் நடத்தப்படும். இந்த இணையாக்கல் ஜூன் மாதத்தோடு நிறைவு பெறுகிறறது. ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய இணையாக்கல் பட்டியல் வெளியிடப்படும்.

‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் இணையவழி வினாடி - வினா போட்டியை நடத்தி வருகிறது. ஒரு மாநிலத்தின் போட்டியில் அதற்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மக்களும் கலந்துகொள்ளலாம். தற்போது புதுவை மற்றும் டையூ, டாமன் மக்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது.

வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஜூன் 1-இல் தொடங்கிய இந்தப் போட்டி, வருகிற 15-ஆம் தேதி நிறைவடைகிறது. எந்த வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இந்த வலைத்தளத்தில் ஏற்கெனவே  கணக்கு வைத்திருப்பவா்கள் நேரடியாக உள்நுழையலாம். மற்றவா்கள் மின்னஞ்சல், செல்லிடப்பேசி செயலி மூலம் ஓடிபி வரப்பெற்று உள்நுழையலாம். இல்லையென்றால், தங்களது சமூக ஊடக கணக்கின் மூலம் உள்நுழையலாம். போட்டியில் 20 கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவா் இணை மாநிலத்துக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com