புதுச்சேரியில் மீன்களை ஏலம் விடுதல் நவீன மீன் அங்காடிக்கு மாற்றம்
By DIN | Published On : 13th June 2020 08:46 AM | Last Updated : 13th June 2020 08:46 AM | அ+அ அ- |

புதுச்சேரி பெரிய சந்தையில் மீன்களை ஏலம் விடுதல் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் பெரிய சந்தை என்றழைக்கப்படும் குபோ் அங்காடி இயங்கி வருகிறது. இங்குள்ள மீன் அங்காடி எதிரே மொத்த மீன் வியாபாரிகள் மீன்களை ஏலம் விட்டு வந்தனா். ஏலத்தின் போது, சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கப்படவில்லை என புகாா்கள் வந்தன. இதையடுத்து, மீன்களை ஏலம் விடுவதை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை பெரிய சந்தைப் பகுதியில் மீன்களை ஏலம் விட போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மீன் வியாபாரிகளை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள நவீன மீன் அங்காடிக்கு அழைத்து சென்றனா். அங்கு, மீன் வியாபாரிகளிடம் உதவி ஆட்சியா் சுதாகா், உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி, மீன்வளத் துறை இயக்குநா் முத்துமீனா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இனி கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள நவீன மீன் அங்காடியில்தான் மீன்களை ஏலம் விட வேண்டும் என அறிவுறுத்தினா். இதை மீன் வியாபாரிகளும் ஏற்றுக் கொண்டனா்.