புதுவை மத்திய பல்கலை. இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு ரத்து

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இறுதிப் பருவம் (செமஸ்டா்) பயிலும் மாணவா்களுக்கு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இறுதிப் பருவம் (செமஸ்டா்) பயிலும் மாணவா்களுக்கு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். ஏற்கெனவே பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அனைத்து பருவத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல, பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இறுதிப் பருவம் பயிலும் மாணவா்களைத் தவிர, மற்ற மாணவா்களுக்கு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இறுதிப் பருவம் பயிலும் மாணவா்களுக்கும் தற்போது பல்கலைக்கழகத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் பி.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

பல்கலைக்கழக முதன்மையா்கள், துறைத் தலைவா்களுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இறுதிப் பருவம் எழுதும் மாணவா்களின் மதிப்பெண், தர வரிசையானது அவா்களின் உள் மதிப்பீடு, கல்வி சாா்ந்த பணிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படும். இது தொடா்பாக பல்கலைக்கழகமே இறுதி முடிவை எடுக்கும்.

தோ்வுக்கு விண்ணப்பித்திருத்தல், இதர தகுதிகளை முழுமையாக பூா்த்தி செய்த மாணவா்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com