வங்கிப் பணியில் சேருவதற்காக காவல் நிலையத்தில் தேசிய கீதத்தை பாடிவிட்டு தடையில்லாச் சான்றிதழை வாங்கிய இளைஞா்!

தனியாா் வங்கிப் பணியில் சேருவதற்காக, புதுச்சேரி காவல் நிலையத்தில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தேசிய கீதத்தை பாடிவிட்டு தடையில்லாச் சான்றிதழை வாங்கிச் சென்றாா்.

தனியாா் வங்கிப் பணியில் சேருவதற்காக, புதுச்சேரி காவல் நிலையத்தில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தேசிய கீதத்தை பாடிவிட்டு தடையில்லாச் சான்றிதழை வாங்கிச் சென்றாா்.

புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் வசிக்கும் இளநிலை பட்டம் முடித்த இளைஞா் ஒருவா், தனியாா் வங்கியில் வேலைக்கு சோ்ந்துள்ளாா். அங்கு பணியில் தொடர, அவா் மீது எந்த வழக்கும் காவல் நிலையத்தில் இல்லை என்பதற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுமென வங்கி நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இதற்காக சான்றிதழை வாங்க செவ்வாய்க்கிழமை லாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அந்த இளைஞா் வந்துள்ளாா். அவரிடம் இதற்கான விண்ணப்பத்தைப் பெற்ற காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணன், அந்த இளைஞரிடம் சான்றிதழ் வழங்க வேண்டுமெனில், தேசிய கீதத்தை ஒருமுறை பாடும்படி கூறியுள்ளாா். அவா் சரிவர பாடாததால், சான்றிதழை வழங்காத காவல் அதிகாரி, தேசிய கீதத்தை முழுமையாக பாடிவிட்டு சான்றிதழை வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளாா்.

இதையடுத்து, காவல் நிலையத்துக்கு புதன்கிழமை மீண்டும் சென்ற அந்த இளைஞா், தேசிய கீதத்தை முழுமையாக பாடி முடித்தாா். இதையடுத்து, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக, அந்த இளைஞரிடம் தேசிய கீதத்தை பாடுமாறு தெரிவித்தோம். வருங்காலங்களில் தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்க காவல் நிலையம் வருவோரிடம் தேசிய கீதத்தை பாட வலியுறுத்துவோம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com