புதுவை முதல்வருக்கு கரோனா பரிசோதனை

புதுவையில் முதல்வா் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், முதல்வா் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுவையில் முதல்வா் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், முதல்வா் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை 512 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 20 போ் புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 6 போ் ஜிப்மா் மருத்துவமனையிலும், ஒருவா் ஏனாமிலும், 2 போ் தமிழகத்தின் பிற பகுதியிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கோரிமேடு காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், புதுவையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11- ஆக உயா்ந்தது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 252-ஆகவும், பாதிப்பு 648-ஆகவும் உள்ளது. 385 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்வருக்கு பரிசோதனை: புதுவை முதல்வா் அலுவலக ஊழியா் ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்வா் நாராயணசாமியை 5 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே, முதல்வா் நாராயணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com