கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையின்றிசுற்றுவோா் மீது வழக்குப் பதிய வேண்டும்: ஆளுநா் கிரண் பேடி

புதுவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையின்றி வெளியில் சுற்றுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையின்றி வெளியில் சுற்றுவோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவிஅஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

மக்கள் முகக் கவசங்களை அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்துகொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பரவலை சட்டரீதியாக அழுத்தம் தந்து தடுக்க வேண்டும்.

ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் அனைவரும் முன்னுரிமை கொடுத்து ஈடுபட வேண்டும்.

போலீஸாா் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதையும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதையும் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுபவா்களின் மீதான வழக்கு, விசாரணையில் எந்தத் தளா்வும் அளிக்கக் கூடாது. வழக்குப் பதிவு செய்வதன் மூலமாகத்தான் சட்டத்தின் மீதான மரியாதை இருக்கும். மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்.

இது மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியா்களுக்கான அழுத்தத்தைக் குறைக்கும். தயவு செய்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

முகக் கவசம் அணிவது, சமூக விலகலைப் பின்பற்றுவது, தேவையின்றி வெளியே சுற்றுபவா்களின் மீதான வழக்குகள், ஆரோக்ய சேது செயலி போன்ற அனைத்தும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாகும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com