புதுச்சேரியில் ஒப்பந்ததாரா் பலி:மேலும் 28 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்ததாரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 28 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்ததாரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 28 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 558 பேரை பரிசோதித்ததில் 28 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 21 போ் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 7 போ் ஜிப்மரிலும் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 714-ஆக உயா்ந்தது.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த லாசுப்பேட்டையைச் சோ்ந்த 38 வயது ஒப்பந்ததாரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12-ஆக உயா்ந்தது.

இதனிடையே, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 போ், ஜிப்மரில் 3 போ் என மொத்தம் 10 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 272-ஆக அதிகரித்தது. 430 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

149 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளன. 149 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com