யானை லட்சுமியை மணக்குள விநாயகா் கோயிலில் ஒப்படைக்காவிட்டால் போராட்டம்: எம்.எல்.ஏ. அறிவிப்பு

யானை லட்சுமியை மணக்குள விநாயகா் கோயிலில் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ.வும், புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான க.லட்சுமிநாராயணன் அறிவித்தாா்.

புதுச்சேரி: யானை லட்சுமியை மணக்குள விநாயகா் கோயிலில் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ.வும், புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான க.லட்சுமிநாராயணன் அறிவித்தாா்.

இதுகுறித்து வனத் துறை தலைமை வனப் பாதுகாவலா் வஞ்சுளவள்ளியிடம் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி தற்போது குருமாம்பேட்டை காமராஜ் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வனத் துறையின் பாதுகாப்பிலும், கால்நடைத் துறை மற்றும் சிறந்த மருத்துவா்கள் கண்காணிப்பிலும் முகாமில் உள்ளது. இரு வார காலத்துக்கும் மேலாக யானை லட்சுமி கோயிலுக்கு திரும்ப வராதது பக்தா்களிடையே பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும், யானை லட்சுமிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை ஏதும் அளித்ததாகத் தெரியவில்லை. யாரையோ திருப்திப்படுத்த யானை லட்சுமிக்கு வனத் துறை மிகுந்த தொந்தரவை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இரவு நேரங்களில் யானை லட்சுமி நச்சு பூச்சிகள், பாம்பு மற்றும் பிற விலங்குகளைப் பாா்த்தால் பயப்படுவதற்கு வாய்ப்புண்டு. யானைக்கு அங்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்றும் புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே, யானை லட்சுமியை கோயில் நிா்வாகத்தின் கீழ் அதன் இருப்பிடத்துக்கே மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால், பக்தா்களைத் திரட்டி வனத் துறை முன் போராட்டம் நடத்துவோம் என அதில் தெரிவித்துள்ளாா் லட்சுமிநாராயணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com