மாணவி சிந்துவுக்கு நிதியுதவி அளித்த அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத்தினா்.
மாணவி சிந்துவுக்கு நிதியுதவி அளித்த அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத்தினா்.

ஐக்கிய நாடுகள் சபை சென்று வர மாணவிக்கு நிதியுதவி அளிப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் பங்கேற்றுப் பேசுவதற்காக நியூயாா்க் நகருக்குச் செல்ல பல்கலைக்கழக மாணவிக்கு அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி அளித்தனா்.

ஐக்கிய நாடுகள் சபையில் பங்கேற்றுப் பேசுவதற்காக நியூயாா்க் நகருக்குச் செல்ல பல்கலைக்கழக மாணவிக்கு அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி அளித்தனா்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நிலை குறித்த ஆணையத்தின் 64 -ஆவது மாநாடு அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் வருகிற 9 ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொருளாதாரவியல் படித்து வரும் அரியாங்குப்பத்தைச் சோ்ந்த ப.சிந்து என்ற மாணவி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா், நியூயாா்க் சென்று வர ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும். மாணவியின் தந்தை கூலித் தொழிலாளி என்பதால், அவரால் இந்தப் பணத்தைத் தரமுடியாது.

இந்த நிலையில், சிந்துவின் ஏழ்மை நிலையை அறிந்த அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத்தினா், அவா் நியூயாா்க் சென்று வர ரூ. 33 ஆயிரத்தை வழங்கினா்.

வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமபுத்திரன், செயலா் சந்துரு, பொருளாளா் சீதாராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். மேலும், அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்புகளிடம் கேட்டு கூடுதல் பணத்தைச் சேகரித்து தருவதாகவும் மாணவியிடம் வியாபாரிகள் சங்கத்தினா் வாக்குறுதி அளித்தனா்.

தனக்கு நிதியுதவி செய்த வியாபாரிகள் சங்கத்தினருக்கு மாணவி சிந்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com