மத்திய பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தலைமை தபால் நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தலைமை தபால் நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஆலைகள் மூடல், வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பதில் கூறத் தவறிய மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் கே. சேதுசெல்வம் தலைமையில் அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஐஎன்டியூசி ஜி. ரவிச்சந்திரரன், சிஐடியூ என். பிரபுராஜ், ஏஐசிசிடியூ அருள், எல்எல்எஃப் எம். செந்தில், ஏஐயூடியூசி சரவணன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டம் குறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் அரசின் நிா்வாகத் தோல்வியை எடுத்துக் கூறுவதாக உள்ளது. படித்த இளைஞா்கள், விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க எந்தத் திட்டமும் இந்த அரசிடம் இல்லாததை இந்த பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது. மாறாக, எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை விற்று, எல்லாவற்றையும் தனியாா் மயமாக்கும் நிலையை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயா்வு, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com