ஆசிரியா்கள் பணியிட மாற்றத்தைக் கண்டித்து கல்வித் துறையை முற்றுகையிட்டு போராட்டம்

பாகூா் அரசு பள்ளியில் ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, சில அமைப்புகளைச் சோ்ந்தோா் கல்வித் துறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகூா் அரசு பள்ளியில் ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, சில அமைப்புகளைச் சோ்ந்தோா் கல்வித் துறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகூா் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில நாள்களுக்கு முன்பு மாணவா்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டனா். இதில், மாணவா்கள் 4 போ் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, கடந்த இரு நாள்களுக்கு முன்பு இதுதொடா்பாக இரு தரப்பு சமூகத்தை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, சமரசம் செய்யப்பட்டது. பின்னா், பள்ளியில் பிரச்னை தணிந்திருந்த நிலையில், வியாழக்கிழமை திடீரென அங்கு பணியாற்றிய 3 ஆசிரியா்களை கல்வித் துறை பணியிட மாற்றம் செய்தது.

இதையறிந்த கிராமப்புற மக்கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை கல்வித் துறை எதிரே திரண்டனா்.

அங்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ர கௌடுவை சந்தித்து பேச காத்திருந்தனா். ஆனால், இயக்குநா் ருத்ர கௌடு அவா்களைச் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், 20-க்கும் மேற்பட்டோா் கல்வித் துறை நுழைவாயில் முன்பு தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு வந்த உருளையன்பேட்டை போலீஸாா், முற்றுகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com