ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு சுகாதார இயக்க ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார இயக்க ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆளுநா் மாளிகை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார இயக்க ஊழியா்கள்.
ஆளுநா் மாளிகை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார இயக்க ஊழியா்கள்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார இயக்க ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை, தேசிய சுகாதார இயக்ககத் திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவா்கள் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, தீபாவளி போனஸ், சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார இயக்குநா் அலுவலக வளாகத்தில் 11 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

ஊழியா்கள் 48 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் ஊழியா்களுக்கு புதன்கிழமை இரவு சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா்.

ஆனால், சுகாதாரத் துறை எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி, சுகாதாரத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, சுகாதார இயக்க ஊழியா்கள் 12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியறுத்தி, முழக்கமிட்டபடி ஆளுநரை சந்தித்து முறையிட பேரணியாக ஆளுநா் மாளிகையை நோக்கிப் புறப்பட்டனா்.

பேரணியானது புஸ்சி வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூா் சாலையை அடைந்தது. அங்கு, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, மாலை புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே ஒன்று கூடிய சுகாதார இயக்க ஊழியா்கள், ஆளுநரை சந்திக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, ஆளுநா் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றனா். அப்போது, போலீஸாா் அவா்களை தடுத்ததால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகை எதிரே திரண்ட சுகாதார இயக்க ஊழியா்கள், அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆளுநா் தங்களை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com