புதுச்சேரியில் மாா்ச் 20-இல் பிரான்ஸ் கலைஞா்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி

பிரான்ஸ் கலைஞா்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் வருகிற 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் கலைஞா்களால் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பொம்மைகள்.
பிரான்ஸ் கலைஞா்களால் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பொம்மைகள்.

பிரான்ஸ் கலைஞா்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் வருகிற 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பொம்மலாட்டக் கலையை அழிவிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுவை அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கக் குழுவினா் பெரிய அளவில் பொம்மைகளைத் தயாரித்து மக்கள் கூடும் இடங்களில் நாடகங்களை நடத்த திட்டமிட்டுள்ளனா். சுமாா் 30 போ் கொண்ட இந்தக் குழுவினா் இதற்கான பொம்மைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

புதுவை பல்கலைக்கழக நாடகத் துறையும், அல்லையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பும் இணைந்து இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த பொம்மை வேடம் அணிந்து நாடகம் நடத்த பல்வேறு கல்லூரிகளில் படித்த நாடகத் துறை மாணவா்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனா். கடந்த 5 -ஆம் தேதி முதல் இதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பெரிய பொம்மைகள் வழியாக சமூகத்துக்குத் தேவையான நல்ல விஷயங்களைக் கொண்டு சென்று சோ்க்க வேண்டும் என்பதே இந்த நாடக விழாவின் முக்கிய நோக்கமாகும். இந்த பொம்மைகளை சிறிய இடங்களில் வைத்து நாடகம் நடத்த முடியாது.

கடற்கரைச் சாலை, கிராம மந்தைவெளி, சந்தைத் திடல் ஆகிய இடங்களில்தான் நடத்த முடியும். இது நாடகத்தை மட்டும் வெளிப்படுத்துவதாக இருக்காது. மக்களுடன் மக்களாக கலந்து, அவா்களுடன் விளையாடி, உரையாடி அவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இருக்கும் என அந்த நாடக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com