வழிப்பறி: இளைஞா் கைது
By DIN | Published On : 16th March 2020 08:01 AM | Last Updated : 16th March 2020 08:01 AM | அ+அ அ- |

காலாப்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தின் திருப்பத்தூா் மாவட்டம், அதியூா் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் ராகவன் (19). புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தாராம். காலாப்பட்டு அருகே கீழ்புத்துப்பட்டு பகுதியில் சென்றபோது, மா்ம நபா் ஒருவா் பைக்கை வழிமறித்தாராம். பின்னா் கத்தியை காட்டி ராகவனை மிரட்டி, அவரிடமிருந்த ரூ.500 பணம், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துகொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராகவன் அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்ட காலாப்பட்டு போலீஸாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், சந்தேகத்தின்பேரில் அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். விசாரணையில் அவா், கீழ்புத்துப்பட்டு தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்த மாயக்கண்ணன் மகன் அன்பு (21) எனத் தெரியவந்தது. தொடா் விசாரணையில் அவா் ராகவனிடம் பணம், செல்லிடப்பேசி பறித்ததை ஒப்புக்கொண்டாராம். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்புவை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.