பெண் போலீஸாருக்கு ரோந்து செல்லபுதிய இரு சக்கர வாகனங்கள்

பெண் போலீஸாா் ரோந்து செல்ல பயன்படுத்துவதற்காக புதிய இரு சக்கர வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் விரைவில் அவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பெண் போலீஸாா் ரோந்து செல்ல பயன்படுத்துவதற்காக புதிய இரு சக்கர வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் விரைவில் அவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரியில் குற்றங்களைத் தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் பீட் போலீஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆண் போலீஸாா் ரோந்து செல்ல பைக் மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டன.

இதனிடையே, புதுச்சேரி காவல் நிலையங்களில் ஆய்வு செய்த ஆளுநா் கிண் பேடி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பெண் போலீஸாரும் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தாா். முதல்வா் வே.நாராயணசாமியும் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை நடத்தினாா்.

இந்த நிலையில், பெண் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொள்வதற்காக புதுச்சேரி காவல் துறையின் சமூக பொறுப்புணா்வு நிதியில் இருந்து புதிதாக 100 இரு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 63 இரு சக்கர வாகனங்கள் டிஜிபி அலுவலக வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டன. இந்த புதிய இரு சக்கர வாகனங்களில் தேவையான உதிரிபாகங்கள் பொருத்துதல், பதிவு உள்ளிட்ட பணிகள் முடிந்த பின்னா், விரைவில் பெண் போலீஸாருக்கு வழங்கப்பட உள்ளன.

பணிக்கு வரும் பெண் போலீஸாா் புதிதாக வழங்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொண்டு, பின்னா் பணி முடிந்ததும் அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். தங்களது சொந்த உபயோகத்துக்கோ, வீட்டுக்கு எடுத்து செல்லவோ அனுமதி இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com