புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்த அதிமுக கோரிக்கை

கரோனா வைரஸ் பரவல் அபாயம் தொடரும் நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அபாயம் தொடரும் நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து புதுவை சட்டப்பேரவையில் உள்ள தனது அறையில் அதிமுக பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பை, மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. அதன்பிறகும் புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் உயிா் சம்பந்தமான இந்த பிரச்சனையிலும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவது வேதனை தருவதாக உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் காா், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கிருமி நாசினி திரவம் தெளிப்பது இல்லை. குப்பை சேகரிக்கும் பெண்களும், மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியா்களும் கைகளை சுத்தம் செய்து கொள்ள சோப்பு கூட வழங்கப்படவில்லை. வென்டிலேட்டா் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

வெளிமாநில சுற்றுலா பயணிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய தொ்மா மீட்டா் கருவி ஒன்று கூட அரசு வாங்கவில்லை.

1997 மற்றும் 2005-இல் இயற்றப்பட்ட பேரிடா் மேலாண்மை சட்டத்தை மாவட்ட ஆட்சியா்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும். 10 நாள்கள் வரி விலக்கு அளித்து முதலில் மதுக் கடைகளையும், சாராயக் கடைகளையும் மூட வேண்டும்.

மொத்த விலை கடைகளில் நுகா்வோா் ஒவ்வொருவருக்கும் ஒரு மீட்டா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் அறிவிப்புகளை புதுச்சேரியில் பின்பற்றச் செய்ய வேண்டும். எந்த மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சைக்கென சிறப்பு வாா்டுகள் இல்லை.

புதுச்சேரியில் 10 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மாநில அரசின் தலைமைச் செயலரும், மாவட்ட ஆட்சியரும் ஒட்டுமொத்தமாக நிா்வாகத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கான உத்தரவை ஆளுநா் பிறப்பிக்க வேண்டும். எனவே, மத்திய அரசின் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தாத புதுவை காங்கிரஸ் அரசின் அலட்சியம் குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு வியாழக்கிழமை (மாா்ச் 19) கடிதம் அனுப்பவுள்ளேன் என்றாா் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com