நாளை கடைகள் முழுமையாக மூடப்படும்: வணிகா்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கடைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கடைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் சிவசங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பு முழு ஆதரவு, ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா். மக்கள் நலமே முக்கியம். எனவே, புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பைச் சாா்ந்த 85 சங்கங்களின் கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முழுமையாக மூடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com