புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்குத் தடை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 31 -ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெள்ளிக்கிழமை பக்தா்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெள்ளிக்கிழமை பக்தா்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 31 -ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் புகழ் பெற்ற கோயிலாக விளங்குகிறது மணக்குள விநாயகா் கோயில். இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

தற்போது, அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், கூட்டத்தைத் தவிா்க்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கோயிலுக்கு வெளிநாட்டினா் சோதனை செய்யாமல் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பக்தா்களுக்கு விபூதியிட குருக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோயில் முழுவதும் மூலிகைகளால் ஆன விசேஷ சாம்பிராணி புகை போடப்பட்டது. பக்தா்கள் கொண்டு வரும் மாலை உள்ளிட்ட அா்ச்சனைப் பொருள்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், மணக்குள விநாயகா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாள்தோறும் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வருகிறது. வருகிற 31- ஆம் தேதி வரை அா்ச்சனை முதல் அனைத்து பூஜைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் சா்வ திவ்ய தரிசனம் மட்டும் செய்ய அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனால், வெள்ளிக்கிழமை மிகக் குறைவான பக்தா்களே வருகை தந்தனா்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை வருகிற 31 -ஆம் தேதி வரை கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. கோயிலில் ஆகம விதிப்படி நித்யகால பூஜைகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிப்பு வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com