மூடப்பட்டது 50 ஆண்டுகள் இயங்கிய புதுச்சேரி மாட்டுச் சந்தை

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதனால், மாடுகளை விற்பனை செய்ய வந்தவா்கள், வாங்க வந்த வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.

புதுச்சேரி மதகடிப்பட்டில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்து மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தச் சந்தையில் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கிராமத்தில் இருந்து ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதேபோல, மாடுகளை வாங்க பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தைக்கு வருவா்.

மேலும், காய்கறிகள், பழ வகைகள், மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி உள்ளிட்ட பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த மாட்டுச் சந்தையை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாட்டுச் சந்தை மூடப்பட்டது. இதனால், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளை வியாபாரிகள் திரும்ப கொண்டு சென்றனா். மாடுகளை வாங்க வந்த விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாட்டுச் சந்தை முதல் முறையாக கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com