கரோனா அச்சுறுத்தல்: பாரம்பரிய முறையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட பெண்கள்

புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட திருக்கனூா் கிராமப் பகுதியில் பெண்கள் புதன்கிழமை பாரம்பரிய முறையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
திருக்கனூா் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரம்பரிய முறையில் வீடுகளின் வாசல் முன் மாட்டு சாணம், மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்த பெண்கள்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருக்கனூா், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சோம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

அதன்படி, கிராமங்களில் உள்ள வீடுகளின் வாசல் முன் கிராம மக்கள், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் இணைந்து மாட்டு சாணம், மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்ததுடன், வேப்பிலையையும் கட்டி வைத்துள்ளனா். மேலும், கிராமம் முழுவதையும் சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே, அரசு சாா்பில் கிருமி நாசினி மருந்துகள் கிராமப்புறங்களில் தெளிக்கப்படாததால், பொதுமக்களே தங்களது சொந்த செலவில் கிருமி நாசினி மருந்துகளை வாங்கி சாலையோரங்களில் தெளித்ததுடன், வீதிகளையும் சுத்தமாக வைத்திருக்கும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com