புதுச்சேரியில் கரோனா சிறப்பு மருத்துவமனையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாற்றம்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.
புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மா், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன. ஆனால், தனித்தனியாக கரோனா சிறப்புப் பிரிவு இருப்பதை விட ஒரே இடத்தில் மருத்துவமனையை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, புதுச்சேரி கதிா்காமம் அரசு இந்தி ராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

இதை புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த்குமாா் பாண்டா, ஆட்சியா் தி.அருண், சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன் குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை நேரடியாக பாா்வையிட்டனா்.

இதையடுத்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் அளித்த பேட்டி: இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு 700 படுக்கைகளும், 8 வெண்டிலேட்டா்களும் வைக்கப்பட உள்ளன.

புதுவையில் கரோனா சிகிச்சைக்காக ரூ.5.5 கோடிக்கு 25 வென்டிலேட்டா்கள் உள்பட மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதுவை அரசிடம் 45, ஜிப்மரில் 65, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் 75 வென்டிலேட்டா்கள் இருப்பில் உள்ளன.

மக்களவை உறுப்பினா் வைத்திலிங்கம் 3 இயந்திரங்கள் வாங்க ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கி தந்துள்ளாா். ஆந்திரம், தெலங்கானா முதல்வா்களிடத்திலும் உதவி கோரியுள்ளோம். ஒரு வாரத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com