புதுவையிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி: கல்வித் துறை அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தைத் தொடா்ந்து, புதுவை மாநிலத்திலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, 

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தைத் தொடா்ந்து, புதுவை மாநிலத்திலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவதாக மாநில கல்வித் துறை அறிவித்தது.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

இந்த நிலையில், புதுவை கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகவுடு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஆண்டு இறுதித் தோ்வை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இறுதித் தோ்வு புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com