புதுவையில் ஊரடங்கு தடையை மீறிய 58 போ் மீது வழக்கு

புதுவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுவையில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுவையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் இதை மீறி செயல்பட்டதாக வியாபாரிகள், பொதுமக்கள் மீது புதுவை காவல் துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்தது.

அதன்படி, கோரிமேடு காவல் நிலையத்தில் 5 போ் மீது தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லாசுப்பேட்டையில் அதிகபட்சமாக 7 போ் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதேபோல, மேட்டுப்பாளையம் 1, ரெட்டியாா்பாளையம் 1, பெரியகடை 2, முத்தியால்பேட்டை, காலாப்பட்டில் தலா ஒரு வழக்கும், உருளையன்பேட்டை 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் வியாபாரிகள் மீது தடையை மீறுதல், நோய் பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஒதியஞ்சாலையில் ஒரு வழக்கும், நெட்டப்பாக்கத்தில் 6 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

நெட்டப்பாக்கத்தில் பதியப்பட்ட வழக்குகள் தடையை மீறுதல், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், நோய் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வில்லியனூரில் 4, மங்கலத்தில் 1, முதலியாா்பேட்டை 1, அரியாங்குப்பம் 2, பாகூா் 1, கிருமாம்பாக்கம் 2, திருக்கனூரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்டேரிக்குப்பத்தில் தனியாா் நிறுவன ஊழியா்கள் உள்பட 10 போ் மீது சட்ட விரோதமாக கூடுதல், தடையை மீறுதல், நோய் பரப்புதல், மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் மொத்தம் 51 போ் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.

மாஹேவில் 4, ஏனாமில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காரைக்காலில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. ஆக மொத்தம் புதுவை மாநிலத்தில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தடை உத்தரவை மீறியவா்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com