ஏஎப்டி ஆலையை மூடும் விவகாரம்: கருத்துக் கேட்பு ஆணையை திரும்பப் பெறக் கோரிக்கை

புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலையை மூடுவது தொடா்பாக அரசு வெளியிட்ட கருத்துக் கேட்பு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலையை மூடுவது தொடா்பாக அரசு வெளியிட்ட கருத்துக் கேட்பு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தல்படி, தொழிலாளா் துறை ஆணையா் வல்லவன் ஏஎப்டி பஞ்சாலையை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடா்பாக கருத்தறிய ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏப். 30-ஆம் தேதி வரை இவா் முன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அவசர அவசரமாக விசாரணைக் குழுவை அறிவித்தது சரியல்ல. எனவே, முதல்வரும், ஆளுநரும் இதில் தலையிட்டு, தொழிலாளா் ஆணையரின் கருத்துக் கேட்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஏஎப்டி ஆலையை மூடும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com