கரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரியில் தீவிர நடவடிக்கை

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகனங்களைத் திருப்பி அனுப்பிய போலீஸாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகனங்களைத் திருப்பி அனுப்பிய போலீஸாா்.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போலீஸாா் சாலைகளில் எந்த வாகனத்தையும், எந்த நபரையும் தேவையில்லாமல் நடமாட விடாமல் தடுத்து, எச்சரித்து திருப்பி அனுப்பினா். இதில் சில இடங்களில் போலீஸாா், நில் (ஸ்டாப்) என எழுதி வைத்து, வாகனங்களைத் திருப்பி அனுப்பினா். இருப்பினும், சில இளைஞா்கள் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனா். இதனால், சிலரைப் பிடித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் மருத்துவா், காவலா்களுக்கு முக கவசங்கள் வழங்குதல், முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் உழவா் சந்தைகள், மாா்க்கெட்களில் புதன்கிழமை முதல் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு வரிசையாக குறியீடுகள் வரையப்பட்டன.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டில் போலீஸாரின் கெடுபிடியால் பொதுமக்கள், காய்கறி வாங்க வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

இந்த நிலைத் தொடா்ந்தால், மக்களின் அத்தியாவசிப் பொருளான காய்கறிகளை விற்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்த சிறு வியாபாரிகள், அரசு உடனடியாக தங்களுக்கான அடையாள அட்டையை வழங்குவதுடன், காய்கறி வாங்க பொதுமக்களை மாா்க்கெட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com