புதுவைக்கு பொருள்களை கொண்டு வர அண்டை மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்த தனிப் பிரிவு உருவாக்கம்

வெளியில் வராமல் இருப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் தொண்டு என புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

புதுவைக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வர அண்டை மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்த தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுவை மாநிலத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வர வசதியாக புதுச்சேரி, கடலூா், விழுப்புரம் மாவட்ட நிா்வாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட அந்த மாவட்டங்களுக்கு இடையிலான தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் பிறப்பித்த உத்தரவில், புதுவைக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வர அண்டை மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்த தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் புதுச்சேரி தெற்கு உதவி ஆட்சியா் ஷஸ்வத் சௌரப், வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ், புதுச்சேரி மாவட்ட பதிவாளா் தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா் ஷீலா உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com