வென்டிலேட்டா் கருவிகள் வாங்க ரூ. 36 லட்சம் நிதி ஒதுக்கீடு: வைத்திலிங்கம் எம்.பி.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 வென்டிலேட்டா் கருவிகள் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 வென்டிலேட்டா் கருவிகள் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 லட்சத்தை ஒதுக்கியுள்ளதாக புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தை பொருத்தவரை பொதுமக்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜிப்மா் மருத்துவமனை கரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ ரீதியான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

மருத்துவமனையின் மற்ற துறைசாா்ந்த வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து கரோனாவுக்காக பிரத்யேக வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜிப்மரில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த திங்களன்று அவசர நிலை ஏற்பட்டால், எப்படி எதிா்கொள்வது என்ற ஒத்திகையும் செய்து பாா்க்கப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதுவையிலுள்ள மருத்துவமனைகளின் தேவையை கருத்தில் கொண்டு உயிா் காக்கும் சாதனமான வென்டிலேட்டா் கருவிகள் மூன்றை வாங்குவதற்காக ரூ.36 லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கியுள்ளேன். மேலும், ஏதாவது அவசர தேவை ஏற்படும்பட்சத்தில் மாநில அரசுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா் வைத்திலிங்கம் எம்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com