‘வெளியில் வராமல் இருப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் தொண்டு’

வெளியில் வராமல் இருப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் தொண்டு என புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

வெளியில் வராமல் இருப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் தொண்டு என புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால் புதுவை மாநிலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்கறிகள், மருந்துகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது. வெளிமாநிலங்களிலிருந்து புதுவை மாநிலத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்களைத் தடுக்கக் கூடாது. அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வரும் ஊழியா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரியுள்ளோம்.

புதுச்சேரியை பொருத்தவரை 60 சதவீதம் மட்டுமே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கிடையாது. வருமுன் காப்பதே சிறந்த வழி.

எனவே, மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வேண்டும். வெளியே வராமல் இருப்பதுதான் நமது சமுதாயத்துக்கு நாம் செய்கின்ற மிகப் பெரிய தொண்டு என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com