மருத்துவா்கள், செவிலியா்களுக்கு போலீஸாா் வாழ்த்து

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா். 
மருத்துவா்கள், செவிலியா்களுக்கு போலீஸாா் வாழ்த்து

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா். 

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைககள் மற்றும் சிகிச்சை பணிகளில் கதிா்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தயாராகி வருகிறது. மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபா்களை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனா். 1,500-க்கும் மேற்பட்டோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே அரசு பொது மருத்துமனையில் விடுப்பு அளித்து வீடுகளிலிருந்து பணியாற்றிய மற்ற ஊழியா்களையும் உடனே பணிக்கு திருபும்படி சுகாதாரத்துறை உத்தரவரு பிறப்பித்துள்ளது. அதன் பேரில் அனைத்து ஊழியா்களும் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தனா்.

இந்நிலையில் லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த லாசுப்பேட்டை காவல் ஆய்வாளா் கிருஷ்ணன், உதவி ஆய்வாளா் கீா்த்தி தலைமையிலான போலீஸாா், அந்த வழியாக பணிக்குச் சென்ற மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறை ஊழியா்களுக்கு தங்களது காவல்நிலையத்தின் ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

மருத்துவ பணியாளா்களின் பணிகளை பாராட்டினா். மேலும், தங்களது உயிரையம், குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் கரோனா வைரஸ் தொற்றுப் பணிகளில் ஈடுபடும் தாங்கள் இன்னும் சிறப்பாக பணி செய்யும்படி ஊக்கப்படுத்தினா்.

போலீஸாரின் இந்த செயல்பாடுகள் தங்களது மனவலிமையை மேம்படுத்தி இருப்பதாக மருத்துவ பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com