கட்செவி அஞ்சல் தகவலை வைத்து வழக்குப் பதிவு செய்தது தவறுகாங்கிரஸ் எம்.எல்.ஏ.
By DIN | Published On : 31st March 2020 03:37 AM | Last Updated : 31st March 2020 03:37 AM | அ+அ அ- |

புதுச்சேரி: கட்செவி அஞ்சல் தகவலை வைத்த தன் மீது வழக்குப் பதிவு செய்தது தவறு என்று புதுச்சேரி காமராஜா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதுவை சட்டப்பேரவையில் கூறியதாவது: மக்களின் பசியைப் போக்குவதற்காக வீட்டிலிருந்து காய்கறிகளைக் கொடுத்தற்காக என் மீது வழக்குப் பதியப்பட்டது. இதுகுறித்து எந்த நாளேட்டிலும் செய்தி வரவில்லை. கட்செவி அஞ்சலில் வந்த தகவலை வைத்து என் மீது வழக்குப் பதிவு செய்தது தவறு.
முதலில் வீடு வீடாகச் சென்றுதான் கொடுக்க திட்டமிட்டேன். ஆனால், சிலருக்கு வழங்குவது தெரிந்தவுடன் மக்கள் கூடிவிட்டனா். அப்போதும் நான் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தித்தான வழங்கினேன். என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.
அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் குறைவானது. மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.